விளாடிமிர் புடின் உடல்நலப்பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் அவரின் சமீபத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தாக்குதலை தொடங்கியது.
தொடர்ந்து போரானது 4வது மாதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.
இதனிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
புடினுக்கு புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் (நடுக்குவாதம்) இருப்பதாக தொடர்ந்து கூறப்படுகிறது.
இதற்காக புடின் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிகிறது, நோய் பாதிப்புகள் காரணமாக புடின் இன்னும் 3 ஆண்டுகளில் இறந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக உளவாளிகள் தெரிவித்த செய்தி உலகெங்கும் பரவி வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் புடின் அதில் கலந்து கொண்டார்.
அப்போது பரிசு பெற்றவர்கள் அருகே புடின் நின்றார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், நிற்க முடியாமல் திணறும் புடினின் கால்கள் கட்டுப்பாடில்லாமல் நடுங்குகின்றன.
அவரிடம் ஒரு தள்ளாட்டம் இருப்பது தெளிவாக அந்த வீடியோவில் தெரிகிறது.