கனடாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Dartmouth நகரில் தான் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.
34 வயதான நெல்சன் பீல்ஸ் என்பவர் துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் சடலமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நெல்சன் சடலத்தை கைப்பற்றினார்கள்.
இது தற்கொலையா அல்லது கொலை என குழப்பம் நிலவி வந்தது.
(Jeorge Sadi/CBC)
இந்நிலையில் நெல்சன் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதகர் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை இப்பகுதியில் இருந்தவர்கள் இந்த கொலை தொடர்பில் வீடியோ அல்லது வேறு ஆதாரங்களை கொண்டிருந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.