புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு (75) கடந்த 2-ம் தேதிகரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப் பட்டது.
இந்நிலையில், டெல்லியில்உள்ள கங்கா ராம் மருத்துவமனை யில் நேற்று சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறும்போது, ‘‘தற்போது சோனியா காந்தி ஸ்திரமாக இருக்கிறார். மருத்துவ மனையில் அவரது உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் நலம் விரும்பிகள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ராகுல் காந்தி இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவார் என்று தெரிகிறது.
இந்நிலையில், பாஜக அரசை கண்டித்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவும் மற்றும் நாடு முழுவதும் போராட் டம் நடத்தப்போவதாகவும் காங் கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.