ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்ட திராப்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப் பதாகக் கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படை யினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. கொல்லப் பட்டவர்கள் மூவரும் புல்வா மாவைச் சேர்ந்தவர்கள். இவர் களுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத் துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களில் ஜூனைத் ஷீர்கோஜ்ரி என்ற தீவிரவாதி கடந்த மே 13-ம் தேதி கொல்லப்பட்ட போலீஸ்காரர் ரியாஸ் அகமது என்பவர் கொலையில் தொடர் புடையவர். மற்ற இரு தீவிர வாதிகள் பாசில் நசீர் பட், இர்பான் அகமது மாலிக் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அந்தப் பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் காஷ்மீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் நேற்று தெரிவித்தார்.