கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் உத்தனபள்ளி காவல் நிலைய சிறப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்தசோதனையில் ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூர் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.