குஜராத், மஹாராஷ்டிராவில் போதைப் பொருள் பறிமுதல்| Dinamalar

ஆமதாபாத் : குஜராத்தில் அரிசி பாக்கெட்டில் இருந்த போதைப் பொருளை, எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட கடற்கரையோரம் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்போது, ‘கோப்ரா பிராண்ட் கோஹினூர் பாஸ்மதி ரைஸ்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்த, 10 அரிசி பாக்கெட்டுகள் கரை ஒதுங்கியிருந்தன.அவற்றைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில், போதைப் பொருட்கள் இருந்தன. அவை, பாகிஸ்தான் பகுதியில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது.

மும்பை
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கூரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வைக்கப்பட்டு இருந்த குடிநீர் சுத்திகரிக்கும் சாதனத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4.88 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.