சென்னை: சிறையில் உடல்நலக்குறைவு ஏற்படும் கைதிகளுக்கு சிகிச்சை குறித்து அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். கைதிகளுக்கு சிகிச்சை தொடச்சார்பாக சிறையிலிருந்து தகவல் தெரிவித்தால் வழிகாவலுக்கு போலீசாரை அனுப்ப வேண்டும் எனவும் காவலர்களை காலதாமதம் ஏற்படாமல் அனுப்பி உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.