Armed with nut grass, farmers present petition to Thanjai collector: மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் புதர் மண்டிய கோரைப் புற்களுடன் வந்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடேசன் கூறுகையில், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையின் இருபுறங்களிலும் உள்ள வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிவதில் தேக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்டும் அவலம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என்றார்.
இதையும் படியுங்கள்: திருவெறும்பூர்: ரசீது எடுப்பதில் சிரமம்; பத்திரம் பதிய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்!
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புதர் மண்டிய கோரைப் புற்களுடன் வந்து கோரிக்கை மனுவை கொடுத்தார் வெங்கடேசன். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.பாலு, ஒன்றிய நிர்வாகி எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்