ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் ஜூன் 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
அல்பினிசம் எனும் வெண்தோல் குறைபாடு ஓர் அரிதான மரபணு குறைபாட்டு நோய்.
அல்பினிசம் ஒரு தொற்று நோய் அல்ல. தோலின் நிறத்தை நிர்ணயிக்கக் கூடிய மெலனின் எனும் நிறமியானது தோல், கண்கள் மற்றும் முடியில் இல்லாததால் இந்நோய் உண்டாகிறது.
இதனால் சூரிய ஒளி மற்றும் பிரகாசமான ஒளியை இவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை.
கண்ணில் மெலனின் பற்றாக்குறை உள்ளதால் பலருக்கு நிரந்தர பார்வை குறைப்பாடு உண்டாக வாய்ப்பு உள்ளது.
தோலில் அதிக அளவு சூரிய ஒளி படும்போது புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
இது ஒரு தொற்று நோய் அல்ல, இருந்த போதிலும் இவர்களின் தோற்றத்தினால் சமூகத்தில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
எனவே மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பேசும் விழிப்புணர்வு தினமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உடல் நிறங்கள் அல்ல, உள்ளத்தின் நிறங்களே மனிதனை வேற்றுமைப்படுத்தும்!