சர்வதேச எல்லையில் துப்பாக்கி சண்டை| Dinamalar

ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் சர்வதேச எல்லை வழியாக ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்றவர்களை, எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்தனர்.

ஜம்மு – காஷ்மீரின் அர்னியா செக்டாரில் சர்வதேச எல்லை வழியாக ஆயுதங்கள் ஏந்திய சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினர் பதிலடியை தாக்குப் பிடிக்க முடியாமல் ஊடுருவ முயன்றவர்கள் தப்பி ஓடினர்; யாரும் சிக்கவில்லை. அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

latest tamil news

100 பயங்கரவாதிகள் பலி


ஜம்மு – காஷ்மீரில் இந்த ஆண்டில் நேற்று வரை, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த- 63 பேர், ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பைச் சேர்ந்த 24 பேர் உட்பட 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இது, கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகம். இதனால், பயங்கரவாத அமைப்புகளின் வலு குறைந்துள்ளது என ராணுவ அதிகாரிகள் கூறினர்.

100 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு – காஷ்மீரில் இந்த ஆண்டில் நேற்று வரை, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த- 63 பேர், ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பைச் சேர்ந்த 24 பேர் உட்பட 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகம். இதனால், பயங்கரவாத அமைப்புகளின் வலு குறைந்துள்ளது என ராணுவ அதிகாரிகள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.