”சர்வதேச நீர்” என்று எதுவும் கிடையாது: ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சீனா பரபரப்பு!


தைவான் மீது சீனாவுக்கு முழு இறையாண்மை உரிமை உள்ளது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் திங்களன்று நடைபெற்ற கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்

உலக அரங்கில் உக்ரைன் ரஷ்யா இடையிலான பிராந்திய பிரச்சனைகளை தொடர்ந்து தற்போது சீனா மற்றும் தைவான் இடையிலான பிராந்திய பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து வருகிறது.

அந்தவகையில், தைவான் தன்னை சுகந்திர நாடாக அறிவித்துக் கொண்டால், சீன ராணுவம் எத்தகைய தயக்கமும் இன்றி தைவான் மீது தனது போர் தாக்குதலை சீனா தொடங்கும் என எச்சரித்தது.

”சர்வதேச நீர்” என்று எதுவும் கிடையாது: ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சீனா பரபரப்பு!

இந்தநிலையில், திங்களன்று நடைப்பெற்ற கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பேசுகையில், தைவான் மீது சீனாவிற்கு முழுமையான இறையாண்மை உரிமை உள்ளது எனத் தெரிவித்தார்.

அத்துடன் தைவான் ஜலசந்தியின் மீது சீனா இறையாண்மை உரிமைகள் மற்றும் அதிகார வரம்பை அனுபவிக்கிறது, அதே நேரத்தில் தொடர்புடைய கடல் பகுதிகளில் மற்ற நாடுகளின் நியாயமான உரிமைகளையும் மதிக்கிறது” என்று வாங் பெய்ஜிங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

”சர்வதேச நீர்” என்று எதுவும் கிடையாது: ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சீனா பரபரப்பு!

மேலும் இந்த மாநாட்டில்(UNCLOS) சீன பிரதிநிதிகள் ‘சர்வதேச நீர்’ என்று எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர் என கேட்டதற்கு, அதனை பிற நாடுகள் உருவாக்கும் கையாளுதல் சாக்குபோக்கு என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போரால்…உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளப்படும் மில்லியன் கணக்கான மக்கள்: அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோட் ஆஸ்டின், முந்தைய வாரம் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களுக்கான அணுகுமுறை “அதிக வற்புறுத்தலாகவும் ஆக்கிரோஷமாகவும்” மாறி வருகிறது என்று கூறியதை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.