கேரளாவில் வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
கோழிக்கோடு குற்றியாடி பகுதியில் நேற்று மாலை பள்ளி முடிந்து வந்து ஆட்டோவில் இருந்து இறங்கிய சிறுவன், வேகமாக ஓடி சாலையை கடக்க முயன்ற நேரத்தில், அவ்வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது மோதியது.
அதில், தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது குறித்து கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.