கடந்த சில மாதங்களாகவே இந்திய பங்குச் சந்தை சரிவில் இருப்பதற்கு காரணம் உக்ரைன் மீது ரஷ்யா போர் என்று கூறப்பட்டாலும், இந்திய பங்குகளை வெளி நாட்டு முதலீட்டாளர்கள் விற்று வருவது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்திய பங்குச் சந்தையில் லட்சக்கணக்கான கோடிகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வந்ததால்தான் கடந்த ஆண்டு பங்கு சந்தை உச்சத்திற்கு சென்றது என்பதும், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 62000 புள்ளிகளை நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், உலக அளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய நேரடி முதலீடு வெளியேறி கொண்டே வருகிறது.
சீனாவில் இருந்து சின்ன நாட்டுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்: இந்தியா வாய்ப்பை இழந்தது எப்படி?
ரூ.14,000 கோடி
குறிப்பாக இந்த மாதம் அதாவது ஜூன் மாதத்தின் பத்து நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 14 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை அன்னிய நேரடி முதலீடு ரூ 1.80 லட்சம் கோடி வெளியேறி உள்ளதாகவும் இதனால் தான் பங்குச் சந்தை தொடர் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணவீக்கம்
சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, வினியோக நெருக்கடி, உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 50 புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆகியவைதான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்கத் தொடங்கிய நிலையில் இன்னும் அது முடிவுக்கு வராமல் பங்குகள் வெளியேறிக் கொண்டே இருப்பதால்தான் தொடர்ச்சியாக பங்குச்சந்தை தடுமாறி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு இன்னும் மூன்று மாதத்திற்குள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வந்தால் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தடுமாற்றம்
அதேபோல் பணவீக்கம் போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகளும் தடுமாற்றமான நிலையில் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவைத் தவிர, தைவான், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன.
FPIs pull out Rs 14,000 crore from Indian equities in June
FPIs pull out Rs 14,000 crore from Indian equities in June | ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.14,000 கோடி: அந்நிய முதலீடுகள் வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை!