ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான மன்ஹெய்மில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நபர் தனது காரை 4 சைக்கிள் ஓட்டுநர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு சற்று முன்பு, சந்தேக நபர் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் (1600 GMT) Rhineland-Palatinate மாநிலத்தில் உள்ள Ellerstadt நகரில் தனது தந்தையைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பொலிஸார் வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.
மன்ஹெய்முக்கு மேற்கே 16 கிலோமீட்டர் (9.9 மைல்) தொலைவில் எல்லர்ஸ்டாட் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: லண்டன் பூங்காவில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்; விசாரணையில் பொலிஸார்
நான்கு சைக்கிள் ஓட்டுநர்கள் மீது காரை விட்டு ஏற்றியதில், 71 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 3 சைக்கிள் ஓட்டுநர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சந்தேகநபர் மோசமாக சேதமடைந்த தனது காரை விட்டுவிட்டு, கால்நடையாக ஓடி ரைன் ஆற்றில் குதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அந்த நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிரித்தானியாவில் பயங்கர தீவிபத்து! களத்தில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்..