உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைக்கு காரணமானவர் என கருதப்படுபவரின் வீட்டை காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தனர்.
சிவன் குறித்து தவறாக பேசிய நபருக்கு பதில் கொடுக்கும் விதமாக நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், பொது சொத்துக்கள் மீதும், போலீசார் மீதும் கல் எரிவது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்படியாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேச மனதில நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால், சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரயாக் ராஜில் வன்முறைக்கு காரணமானவர் என்று ஜாவேத் அகமது காவல் துறை கைது செய்திருந்தது.
இந்த அவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. அரசின் முறையான அனுமதி பெறாமல் வீடு கட்டப்பட்டதற்காக ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதாக மாநகராட்சி உயரதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், காவல் துறையினர் மீது கல் வீசி தாக்கிய புகாருக்கு ஆளான இருவரின் வீடும் ஷகாரன் பூரில் இடிக்கப்பட்டு உள்ளது.
இதனை நெட்டிசன்கள் இன்டன்ட் கர்மா “புல்டோசர்” என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயத்தில் ஒருசிலர் இதற்க்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.