தருமபுரி அருகே விரைவு ரயிலில் அடிபட்டு இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எர்ணாகுளம் – மும்பை செல்லும் குர்லா விரைவு ரயில் சேலம், தருமபுரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது தருமபுரி ரயில் நிலையம் அருகில் வந்தபோது, இரண்டு பெண்கள் ரயில் சிக்கி உடல் நசுங்கி உயிழந்தனர். இதனையறிந்த ரயில் ஓட்டுநர் தருமபுரி ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் சடலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தது போல, தலை மட்டும் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தொடர்ந்து 10 மீட்டர் இடைவெளியில் உடல், கை, கால்கள் நசுங்கிய நிலையில் ஒரு பெண் சடலமாக கிடந்தார்.
மேலும் அந்த பகுதியில் ஆய்வு செய்ததில், இறந்து கிடந்தவர்களின் செல்போன் கிடைத்தது. அதனை கைப்பற்றிய காவல் துறையினர், அதிலிருந்து நம்பரை எடுத்து, அவர்களது உறவினரிடம் பேசினர். ஆதில், இறந்த கிடந்தார்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (32), ராதாம்மாள் (60) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பவில்லை. இதனால் இவர்களை காணவில்லை என தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி ரயில்வே காவல் துறையினர், ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில் சிக்கினார்களா? அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM