தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும்போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் விழுந்ததில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, காயல்பட்டினம் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் படுகாயமடைந்த மனோகரன், சரவணன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM