திண்டுக்கல் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூர் அம்மாபட்டியை சேர்ந்தவர் ஜான்கென்னடி. இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டது போல் சுற்றி திரிந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை கொடைரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை வீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.