புதுடெல்லி: இந்தியாவின் மின் தேவை நடப்பு ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. தினசரி மின் தேவை கூடுதலாக 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் மெகாவாட் வரையில் அதிகரித்துள்ளது என்று மத்திய மின் துறைஅமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர்கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் மின் தேவையும் அதிகரித்துள்ளது. தவிர, இவ்வாண்டு வட மாநிலங்களில்வெப்ப அலை தீவிரமாக உள்ளது. இதனால் அன்றாட மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஜுன் 9-ல் நாட்டின் மின் தேவை2.10 லட்சம் மெகா வாட்டாகஇருந்தது. இது உச்சபட்சஅளவாகும். அதிகரித்திருக்கும்மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டில் மின்உற்பத்தி நிலையங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
கடந்த எட்டு ஆண்டுகளில் மின் துறை மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 2014-க்கு முன்பு நாட்டில்மின் பற்றாக்குறை நிலவியது. அப்போது கிராமங்களில் சராசரியாக 12.5 மணி நேரம்தான் மின்சாரம் இருந்தது.
ஆனால், இப்போது, கிராமங்களில் 22.5 மணி நேரம் மின்சாரம் இருக்கிறது. முன்பு இந்தியா 20 சதவீதம் அளவில் மின்பற்றாக்குறை கொண்ட நாடாக இருந்தது. ஆனால், இப்போது மின் உபரி நாடாக மாறியுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகள் மின்சாரம் இல்லாமல் இருந்த கிராமங்களில் இப்போது விளக்குகள் எரிகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.