பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். பைபாஸ் சாலையில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் குடும்பத்தோடு காரில் திருப்பதி கோயிலுக்கு சென்ற இவர், இன்று திரும்பி வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி விநாயகபுரம் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள நிலத்தில் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சமீபத்திய செய்தி: உறவுக்கார பெண் மரணம்! மனவேதனையில் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்த இளைஞர்!
இதில் காரில் பயணித்த 60 வயது கர்பகம் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிகொண்டா காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– ச.குமரவேல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM