தேசிய அளவில் புதிய கட்சியை தொடங்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான அவர், நாடுதழுவிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இதற்கு கைமேல் பலன் கிடைக்காத சூழலில், பாரதிய ராஷ்ட்ர சமிதி என்ற பெயரில் தேசியக் கட்சியொன்றை புதிதாக தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயற்குழு கூட்டத்தில், தேசியக்கட்சி திட்டம் முழு வடிவம் பெறும் எனவும் ஜூன் இறுதியில் டெல்லியில் சந்திரசேகர ராவ் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM