நடிகை பற்றிய செய்திக்கு மன்னிப்பு கோரியது நாளிதழ்| Dinamalar

சிட்னி : நடிகையின் பாலியல் விருப்பம் குறித்து செய்தி வெளியிட்டதற்கு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த, ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ நாளிதழ், நடிகையிடம் மன்னிப்பு கோரியது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகை ரெபல் வில்சன், 42. இவர், ஆடை வடிவமைப்பாளர் ரமோனா அக்ருமா என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாக, கடந்த 10ம் தேதி, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில், புகைப்படத்துடன் தகவலை பகிர்ந்தார்.

இதற்கு அடுத்த நாள், ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ நாளிதழின் கிசுகிசு எழுத்தாளர் ஆன்ட்ரூ ஹார்னரி, கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில், நடிகை ரெபல் ஓரினச் சேர்க்கையிலும் விருப்பம் உள்ளவர் என்ற தகவல், தனக்கு முன்பே தெரியும் என்றும், அதை பொது வெளியில் வெளியிட அவருக்கு கெடு விதித்து இருந்ததாகவும் குறிப்பிட்டார்.இது, சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தன் பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்த, நடிகை ரெபல் வில்சனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக, பல்வேறு தரப்பினரும் பத்திரிகையை குற்றஞ்சாட்டினர்.இதை தொடர்ந்து, பத்திரிகையின் இணையதளத்தில் இருந்து, அந்த கட்டுரை நேற்று நீக்கப்பட்டதுடன், அதை எழுதிய ஆன்ட்ரூ ஹார்னரி வெளிப்படையாக மன்னிப்பும் கோரினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.