நடுத்தர மக்களின் கனவு உடைந்தது.. இனி சமாளிக்க முடியாது, புலம்பும் மக்கள்..!

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு மிகப்பெரிய கனவு என்றால் அது கட்டாயம் சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது தான்.

கடந்த 4 வருடமாக வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வந்த வேளையில் பல கோடி இந்தியக் குடும்பங்கள் சொந்த வீட்டுக் கனவை நினைவாக்கினர். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.

இதனால் சொந்த வீட்டை வாங்க நினைக்கும் பலர் தற்போது வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

எண்ணெய்யை மட்டும் நம்பி இனி பிரயோஜனமில்லை: துபாயின் வேற லெவல் முடிவு

வட்டி விகித உயர்வு

வட்டி விகித உயர்வு

ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வட்டி விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியது. இதனால் அனைத்து கடனுக்கான வட்டி விகிதங்களும் வங்கிகளில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வீட்டுக் கடனுக்கான வட்டி

வீட்டுக் கடனுக்கான வட்டி

இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு உள்ள வட்டி விகிதத்தின் மூலம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து ஒவ்வொரு மாதமும் செலுத்தும் ஈஎம்ஐ தொகையை அதிகரிக்கும். இதன் படி 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடனுக்கு 12,000 ஈஎம்ஐ அதிகரித்துள்ளது. இதுவே 50,00,000 ரூபாய் வீட்டுக் கடன் என்றால் 6000 ரூபாய் அதிகரித்திருக்கும்.

நடுத்தர மக்கள்
 

நடுத்தர மக்கள்

இந்த வித்தியாசம் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் பகுதியை மக்களை வீட்டு கடன் வாங்க முடியாமல் செய்கிறது. வீட்டு கடன் வாங்குபவர்கள் 20 வருடமும், 30 வருடமோ ஈஎம்ஐ முழுமையாகக் கட்டி முடிப்பதே பெரிய கஷ்டமாக இருக்கும் நிலையில் இந்த வட்டி உயர்வு மூலம் ஏற்பட்டு உள்ள பாதிப்பு நடுத்தர மக்களைப் பெரிய அளவில் பாதிக்கிறது.

ஹோம் லோன் வட்டி

ஹோம் லோன் வட்டி

2019ஆம் ஆண்டின் ஹோம் லோன் வட்டி விகிதத்தை ஒப்பிடும் போது 1.50 சதவீதம் குறைவாக இருந்தாலும், மக்களின் வருமானம் மற்றும் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இந்த 2 முறை வட்டி உயர்வு மூலம் ஏற்பட்டு ஈஎம்ஐ தொகை உயர்வு நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரிய சுமை தான்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

எப்படிச் சிலிண்டர், பெட்ரோல், டீசல், காய்கறி விலை உயர்வு பாதிக்கிறதோ, அதேபோல் தான் இந்த வீட்டு கடனுக்கான வட்டி விகித உயர்வு ஒட்டுமொத்த கட்டுமான துறை, ரியல் எஸ்டேட் துறையும் பாதித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Home Loan EMI hike impacts middle class people of India; Real Estate sector facing road bump

Home Loan EMI hike impacts middle class people of India; Real Estate sector facing road bump நடுத்தர மக்களின் கனவு உடைந்தது.. இனி சமாளிக்க முடியாது, புலம்பும் மக்கள்..!

Story first published: Monday, June 13, 2022, 15:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.