நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன்: ப.சிதம்பரம்

புதுடெல்லி:
நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் ப.சிதம்பரம். நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறையில் நேரில் ஆஜரானார்.

ராகுல்காந்தியை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளுவின்போது ப.சிதம்பரத்தை போலீசார் தள்ளியதில் அவரது இடது கையின் விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன். சிறிய காயத்தில் இருந்து 10 நாட்களில் குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.