நீண்ட கால அரசப் பணி பிரிட்டன் ராணி சாதனை| Dinamalar

லண்டன் : உலகிலேயே நீண்ட காலம் அரசப் பணியில் இருந்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரசப் பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது, 96 வயதாகும் இரண்டாம் எலிசபெத், பிரிட்டனில் நீண்ட காலம் அரசப் பணியில் இருந்த சாதனையை, 2015ல் புரிந்தார்.
இந்நிலையில், உலகிலேயே மிக நீண்ட காலம் அரசப் பணியில் இருந்தோர் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் இரண்டாம் எலிசபெத்.தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927 – 2016 வரை, 70 ஆண்டு, 126 நாட்கள் அரசராக இருந்தார். அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் முறியடித்துள்ளார்.பிரான்சின் பதினான்காம் லுாயிஸ், 1643 – 1715 வரை, 72 ஆண்டு, 110 நாட்கள் அரசராக இருந்து, சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.