பிரித்தானியாவில் மீண்டும் 104 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 470 என தெரிய வந்துள்ளது.
புதிய தொற்றாளர்கள் தொடர்ந்து கண்டறியப்படுவதால், வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் இருந்து தற்போது 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் எவருக்கேனும் குரங்கம்மை தொற்று தொடர்பில் சந்தேகம் ஏற்படும் எனில் உடனடியாக பாலியல் சுகாதார மையங்களின் உதவியை நாட வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் மொத்தம் 452 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் 12 பேர்களுக்கும் வேல்ஸில் நால்வருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் லண்டன் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், 99 சதவிகிதத்தினர் ஆண்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குரங்கம்மை தொற்றானது பால்வினை நோயல்ல என்பதை குறிப்பிட்டுள்ள UKHSA அமைப்பு, இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு பாலியல் உறவு காரணமாகவே பரவியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு தொடர்பில் சந்தேகம் இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.