புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திணறும் இந்திய பொருளாதாரம்.. தமிழ்நாட்டின் நிலைமை என்ன தெரியுமா..?

சர்வதேசச் சந்தைகளின் தாக்கத்தால் இந்திய பொருளாதாரம், வர்த்தகச் சந்தை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரத்திற்குப் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.

உண்மையில் இந்தியாவின் நிலைமை தான் என்ன..?

இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா?

 இந்தியா

இந்தியா

இந்தியாவின் ஏற்றுமதி அளவீடுகள் வரலாற்று உச்சத்தில் உள்ளது, பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் இரட்டிப்பாகியுள்ளது, கடந்த சில தசாப்தங்களாகப் பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ள நடுத்தர மக்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர், சினிமா, கார்கள், ரியல் எஸ்டேட் மற்றும் விடுமுறை என மக்கள் அதிகளவில் செலவழித்து வருகின்றனர்.

வேகமான வளர்ச்சி

வேகமான வளர்ச்சி

இந்த ஆண்டு எந்தவொரு பெரிய பொருளாதார நாடுகளிலும் இல்லாத வேகமான வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. இவை அனைத்தும் உண்மை தான், ஆனால் இதன் பலன்கள் பல கோடி இந்தியர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

 வேலைவாய்ப்பு சந்தை
 

வேலைவாய்ப்பு சந்தை

இந்தியாவின் இந்த வளர்ச்சி வேலைவாய்ப்புச் சந்தையில் எதிரொலிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பட்டம் பெற்று வரும் மாணவர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. பல லட்சம் பட்டதாரிகள் இன்னும் வைகப்படுத்தாத துறையில் தான் உள்ளனர்.

அதிகம் செலவு செய்யும் போக்கு

அதிகம் செலவு செய்யும் போக்கு

இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை தற்போது அதிகப்படியான செலவு செய்யும் மக்களின் பழக்கத்தின் வாயிலாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகத்தின் பலன்கள் நகரத்து மிடில் கிளாஸ் மக்களைத் தாண்டுவது இல்லை.

பொருளாதாரப் பிரிவுகள்

பொருளாதாரப் பிரிவுகள்

கொரோனா தொற்றுக்குப் பின்பு பொருளாதாரப் பிரிவுகள் மத்தியில் இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாகப் பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

கடந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 8.7% வளர்ச்சியடைந்து 3.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று கடந்த மாத இறுதியில் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உள்நாட்டு முதலீட்டுச் சந்தையில் மந்தநிலை, அரசு பணியமர்த்தலில் மந்த நிலை, வேலையின்மை பாதிப்புகளைச் சரி செய்ய மானிய விலையில் எரிபொருள், உணவு மற்றும் ஏழைகளுக்கு வீடுகள் ஆகியவற்றை அளித்து வருகிறது மத்திய அரசு.

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

ஜூன் மாதம் 12ஆம் தேதி வரையில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவீதமாக உள்ளது. இது நகரபுறத்தில் 7.9 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 7.3 சதவீதமாகவும் உள்ளது.

மே மாதத்தை எடுத்துக்கொண்டால் அதிகப்படியான வேலைவாய்ப்பின்மை உடன் தவித்தது ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் தான்.

 

மே மாத வேலைவாய்ப்பின்மை தரவுகள்

மே மாத வேலைவாய்ப்பின்மை தரவுகள்

ஹரியானா – 24.6 சதவீதம்
ராஜஸ்தான் – 22.2 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் – 18.3 சதவீதம்
திரிபுரா – 17.4 சதவீதம்
டெல்லி – 13.6 சதவீதம்
கோவா – 13.4 சதவீதம்
பீகார் – 13.3 சதவீதம்
ஜார்கண்ட் – 13.1 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் – 9.6 சதவீதம்
தெலுங்கானா – 9.4 சதவீதம்
பஞ்சாப் – 9.2 சதவீதம்
அசாம் – 8.2 சதவீதம்
சிக்கிம் – 7.5 சதவீதம்
கேரளா – 5.8 சதவீதம்
மேற்கு வங்காளம் – 5.8 சதவீதம்
புதுச்சேரி – 5.6 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் – 4.4 சதவீதம்
கர்நாடகா – 4.3 சதவீதம்
மகாராஷ்டிரா – 4.1 சதவீதம்
மேகாலயா – 4.1 சதவீதம்
தமிழ்நாடு – 3.1 சதவீதம்
உத்தரப்பிரதேசம் – 3.1 சதவீதம்
உத்தரகண்ட் – 2.9 சதவீதம்
ஒடிசா – 2.6 சதவீதம்
குஜராத் – 2.1 சதவீதம்
மத்தியப் பிரதேசம் – 1.6 சதவீதம்
சத்தீஸ்கர் – 0.7 சதவீதம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India economy is not able to create jobs

India economy is not able to create jobs புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திணறும் இந்திய பொருளாதாரம்.. தமிழ்நாட்டின் நிலைமை என்ன தெரியுமா..?

Story first published: Monday, June 13, 2022, 18:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.