மலேசியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையால் உற்பத்தி, கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாமாயில் உற்பத்திக்கான பனை அறுவடை, போதிய தொழிலாளர்கள் இல்லாததால், பெரியளவில் தேக்கநிலை காணப்படுகிறது.
பொதுமுடக்கத்தால் வெளிநாட்டு ஊழியர்களை சேர்ப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகும் அனைத்து துறைகளிலும் 12 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.