பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூஜுவாடி செக்போஸ்ட் பகுதியில் நேற்று ஓசூர் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில் அதில் 73 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 93 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்ததில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தென்கரை கிராமத்தை சேர்ந்த முகமது கனி மற்றும் ரஹீம் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பெங்களூரில் இருந்து திருச்சிக்கு குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களையும் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்த போலீசார் முகமது கனியை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரின் சோதனையின்போது தப்பி ஓடிய ரஹீமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.