விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்த நெட் சென்டருக்கு, சார் ஆட்சியர் சீல் வைத்தார்.
திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வந்த நபர், போலி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாக கொடுத்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ராகவேந்திரா பிரிண்டர்ஸ் என்னும் நெட் சென்டரில் பல்வேறு போலி ஆவணங்கள் தயார் செய்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து நெட் சென்டருக்கு சார் ஆட்சியர் சீல் வைத்த நிலையில், கடை உரிமையாளர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.