மாமனிதன் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். 'மாமனிதன்' படம் சில காரணங்களால் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன. அதன்படி வருகின்ற ஜுன் 24-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.