புதுடெல்லி: பாஜக செய்தி தொடர்பாளர்கள் நுாபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரும் முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதச்சார்பற்ற நாடான நமது நாட்டில் இதுபோன்ற பேச்சுகள் தேவையற்றது. நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? இந்த விவகாரத்தில் அவர் மனம் திறந்து பேச இதுவே சரியான நேரம்.
இதுபோன்ற மதவெறுப்பு பேச்சை தொடங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எதிர்காலத்தில் இதுபோன்ற பேசுவதற்கு கட்சித் தலைவர்களிடையே தயக்கத்தை ஏற்படுத்தும். எனவே மதவெறுப்பு பேசிய பாஜக நிர்வாகிகள் மீது பிரதமர் நடவடிக்கை எடுத்து முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். -பிடிஐ