ஒரு காலகட்டத்தில் இந்த பங்கினில் ஐபிஓவில் வாய்ப்பு கிடைக்குமா? ஐபிஓவில் பங்கு கிடைக்குமா? என்ற அச்சம் நிலவி வந்தது. இது ஒரு புறம் எனில், மறுபுறம் நிபுணர்கள் எல் ஐ சி ஐபிஓ வெளியிடுவதற்கான சரியான காலகட்டம் இதுவல்ல? அப்படி செய்தால் பேடிஎம் போலவே இதுவும் சரிவினைக் காணலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இப்படியொரு பதற்றமான நிலையில் தான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் பங்கு சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது. பங்கு சந்தையிலும் ஒரு வழியாக பட்டியலிடப்பட்டது.
பட்டியலிடப்பட்ட முதல் நாளில் இருந்தே பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று இப்பங்கின் விலையானது 675 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
ஐடி நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!
பலத்த சரிவில் பங்கு சந்தை
இந்திய பங்கு சந்தையானது பரவலான பல காரணிகளுக்கு மத்தியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச பணவீக்கம், ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது அதன் நடவடிக்கையினை மேலும் கடுமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் இன்று பலத்த சரிவினைக் கண்டன.
வரலாறு காணாத சரிவு
இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் அதன் ஆல் டைம் லோவாக 667 ரூபாயினை தொட்டுள்ளது. இது தான் இன்றைய குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார குறைந்தபட்ச விலையாகும். இதன் இன்றைய உச்ச விலை 690.90 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும்.
பிஎஸ்இ-ல் என்ன நிலவரம்?
இதே பி எஸ் இ-யில் 5.85% குறைந்து, 668.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. பி எஸ் இ-யில் அதன் ஆல் டைம் லோவாக 666.90 ரூபாயினை தொட்டுள்ளது. இது தான் இன்றைய குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார குறைந்தபட்ச விலையாகும். இதன் இன்றைய உச்ச விலை 691.40 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும்.
30% மேலாக சரிவு
இப்பங்கின் விலையானது ஐபிஓ-வில் இருந்து 30% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4.3 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. சுமார் 1.7 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விலையானது 949 ரூபாயாகும். இதன் சந்தை மதிப்பானது 6 லட்சம் கோடி ரூபாயாகும்.
முதலீட்டினை அழித்த பங்கு
ஆசியாவில் முதலீட்டாளர்களின் செல்வத்தை அழித்த பங்குகளில் எல் ஐ சியும் ஒன்று எனலாம். ஐபிவில் இருந்து மட்டும் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் பங்கு சந்தையில் நுழைந்த நிறுவனங்களில் மிக மோசமான இழப்பினை கொடுத்த பங்குகளில் எல் ஐ சியும் ஒன்று.
30% decline from LIC IPO: LIC among top asia wealth loser
LIC is one of the stocks that has destroyed the wealth of investors in Asia. Investors have lost about Rs 1.7 lakh crore in assets from since IPO