கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையத்தில் முதியவர் மீது மினி பேருந்து ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல் பகுதியை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்ற முதியவர், தனது உறவினர் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு, மினி பேருந்து ஒன்றின் பக்கவாட்டை பிடித்தப்படி நடந்த அவர், திடீரென தடுமாறி கீழே விழுந்தார்.
இதனை அறியாத அப்பேருந்தின் ஓட்டுநர், வாகனத்தை இயக்கியதை அடுத்து, அதன் பின்சக்கரம் அவரின் மீது ஏறி இறங்கியது.
இதில், படுகாயமடைந்த முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.