அமெரிக்காவின் மே மாத பணவீக்கம் 40 ஆண்டுகால உயர்வை எட்டிய நிலையில், அமெரிக்க மத்திய வங்கி ஜூன் 14-15 தேதிகளில் நடத்த உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் மிகப்பெரிய அளவில் உயர்ந்தும் என எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டு சந்தை தலைகீழாக மாறியுள்ளது.
இதன் தாக்கத்தின் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.6 லட்சம் கோடி வரை சரிந்ததுள்ளது.
ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவுக்கு என்ன காரணம்..? சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?!
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பையும் உள்ளடக்கிய பிஎஸ்இ-யின் மொத்த சந்தை மூலதனம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 251.84 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் இன்று 5.71 லட்சம் கோடி ரூபாய் குறைந்து ரூ.246.12 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
பணவீக்கம், போர்
உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ரெசிஷன் பயம் ஆகியவை உலகளவில் பொருளாதார தேக்க நிலை மற்றும் மந்தநிலை அச்சத்தை தூண்டியுள்ளது.
உள்ளீட்டு விலை
இதன் வாயிலாக இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களின் உள்ளீட்டு (Input) விலை அழுத்தங்களால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து நிதிச் சேவைகள், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று அதிகப்படியான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
பென்ச்மார்க் வட்டி விகிதம்
பணவீக்க உயர்வால் அமெரிக்கா மட்டும் அல்லாமல் இந்திய மத்திய வங்கிகளும் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்தி கொள்கை நிலைப்பாட்டை மாற்றுவதில் உறுதியாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான பத்திர முதலீட்டு சந்தைக்கு தங்களது பணத்தை மாற்றுகின்றனர்.
ரீடைல் முதலீட்டாளர்கள்
இன்றைய வர்த்தகத்தில் இந்தியா விக்ஸ் குறியீடு 8.6% உயர்ந்து 21.26 ஆக உள்ளது. அதே நேரத்தில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியான சரிவை பதிவு செய்து ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான இழப்பை கொடுத்துள்ளனர். ஹிண்டால்கோ, பஜாஜ் ட்வின்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய அனைத்து டாப் 50 பங்குகளும் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
FII முதலீட்டாளர்கள்
எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள்கள் 2022ஆம் ஆண்டின் இன்றைய நாள் வரையில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் தொகையை வெளியேற்றியுள்ளனர். மேலும் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 காசுகள் சரிந்து 78.21 ஆக உள்ளது.
Black monday for Indian stock market and investors; nearly 6 lakh crore Mcap lost today
Black monday for Indian stock market and investors; nearly 6 lakh crore Mcap lost today மும்பை பங்குச்சந்தையின் கருப்பு திங்கள்.. 4 மணிநேரத்தில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு..!