மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச்சரை அமர்த்தும் சட்ட முன்வரைவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதில் முதலமைச்சரை அமர்த்தும் மசோதாவுக்கு ஆதரவாக 182 உறுப்பினர்களும், எதிராக 40 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.