டெல்லியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி காங்கிரஸ் அலுவலகம் நோக்கி வந்த ஏராளமானோரை சாலையிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் வேனில் ஏற்றினர். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாக்கத்துறை அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.