ரிக்‌ஷாவிலிருந்து தவறிவிழுந்த குழந்தை – பஸ்முன் பாய்ந்து காப்பாற்றிய ட்ராஃபிக் போலீஸ்

பஸ் முன் பாய்ந்து குழந்தை உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீசுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அவனிஷ் சரண் என்ற நபர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரிக்‌ஷாவில் இருந்து விழுந்த குழந்தையை போக்குவரத்து காவலர் ஒருவர் சரியான நேரத்தில் எப்படி காப்பாற்றினார் என்பதே அந்த வீடியோ. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் 41 க்கும் அதிகமான லைக்குகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது.

To his credit, the traffic policeman went for the child at the risk of getting mowed down by the bus.

The bus driver was judicious.
The traffic policeman was brave and judicious.
— Vikram Jamwal (@jamwalvikram) June 12, 2022

அந்த வீடியோவில், நடுரோட்டில் நின்றுகொண்டு காவலர் ஒருவர் போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது எதிரே பேருந்து வரும்போது ரிஷ்காவில் இருந்து திடீரென ஒரு குழந்தை தவறி விழுவதை பார்க்கிறார். உடனடியாக பேருந்தை நிறுத்தச்சொல்லி ஓடிச்சென்று குழந்தையை தூக்குகிறார். குழந்தையின் தாயாரும் சட்டென ரிஷ்காவை விட்டு இறங்கி குழந்தையை வாங்கிக்கொள்கிறார். இந்த வீடியோவை பார்த்த சிலர் ரிக்‌ஷா ஓட்டுநரை திட்டி பதிவிட்டுள்ளனர். பலர் பேருந்து ஓட்டுநர் மற்றும் காவலரை பாராட்டி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.