வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்யவும், ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட 6 புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் வகையில், அரசியல் கட்சிகளின் பதிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.