சென்னையில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காவல்துறையினர் தாக்கியதால் தான் ராஜசேகர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மரணம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கை விசாரணைக்கு எடுத்த ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன், விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த ராஜசேகர் யார்? அவர்மீதுள்ள குற்ற வழக்குகள் பின்வருமாறு:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM