ஹைதராபாத்தில் திடீரென 500 ரூபாய் தாள்களை தெருவில் வீசிய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள தெரு ஒன்றில் திடீரென ஒரு இளைஞர் 500 ரூபாய் தாள்களை கொத்தாக வீசியெறிந்துவிட்டுச் சென்றார். இதனைக்கண்ட சிலர் சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர். சிலர் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
WATCH | Man tosses 500 rupee notes on Hyderabad streets; cops begin probe.#Hyderabad #ViralVideo pic.twitter.com/cgItEKUK7T
— TIMES NOW (@TimesNow) June 13, 2022
500 ரூபாய் தாள்களை தெருவில் வீசியெறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஒரு திருமண ஊர்வலத்தின்போது 500 ரூபாய் நோட்டுகளை இளைஞர் ஒருவர் வீசியெறிந்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. வீடியோ பதிவு அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: “நன்றாக இருந்தபோதே திடீர் வாந்தி”- விசாரணை கைதி மரணம் குறித்து கூடுதல் ஆணையர் அன்பு தகவல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM