iPhone 14 Max Leaks: விடைபெறும் ஐபோன் 13 மினி… தடம்பதிக்கும் ஐபோன் 14 மேக்ஸ்!

Apple iPhone 14 Max Leaks: கடந்த சில வருடங்களாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்கள் வெளியிடும்போது, மொத்தம் நான்கு வகைகளைக் கொண்டு வரும். அதில் ஒன்று சிறிய அளவிலான குறைந்த விலை ஐபோனாக இருக்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை.

ஆப்பிள், தனது தொகுப்பில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு வெளியாகக் காத்திருக்கும் ஐபோன் 14 தொகுப்பில் மினி வேரியண்ட் இருக்காது என்றும், அதற்கு பதிலாக ஐபோன் 14 மேக்ஸ் வேரியண்ட் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இதுவரை வெளியான அனைத்து தகவல்கள் இதனை உறுதிசெய்துள்ளது. இந்த சூழலில், ஆப்பிள் புதிய ஐபோன் 14 மேக்ஸ் போனை கொண்டு வந்தால், காம்பேக்ட் போன் விரும்பிகளின் நிலை என்னவாகும் என்பது தான் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனென்றால், iPhone 14 Pro Max டிஸ்ப்ளே அளவை தான் ஐபோன் 14 மேக்ஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் 6.7″ OLED ரெட்டினா டிஸ்ப்ளே இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் தகவல்களைக் காணலாம்.

Apple iPhone 12: ஐபோன் SE-ஐ விட விலை மலிவாக ஆப்பிள் ஐபோன் 12..!

தடம்பதிக்கும் ஐபோன் 14 மேக்ஸ் (iPhone 14 Max Specifications)

போனின் டிஸ்ப்ளேக்கள் பெரிதாகிக் கொண்டே போன நேரத்தில், ஆப்பிள் நிறுவனம் மட்டும் ஐபோன் 12 மினி எனும் காம்பேக்ட் போனை 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து ஐபோன் 13 மினியும் வந்தது.

ஸ்மார்ட்போன்களின் அளவு சிறிதாக இருந்தாலும், அதன் அம்சங்களில் நிறுவனம் எந்த சமரசமும் செய்யவில்லை. இது, போனின் விற்பனைக்கு தூண்டுதலாக இருந்தது. கைக்கு அடக்கமான, பாக்கெட்டில் நேர்த்தியாக இருக்கும் ஐபோன் மினி வெர்ஷனை பயனர்கள் பலரும் விரும்பினர்.

ஆனால், பெரிய திரை வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகளவில் இருப்பதால், நிறுவனம் தங்களின் முடிவை மாற்றியுள்ளது. விலையைப் பொருட்படுத்தாமல் பல திரை அளவுகளில் ஸ்மார்ட்போன்களைத் தேர்வுசெய்யக்கூடிய ஆண்ட்ராய்டு சுற்றுச்சூழல் அமைப்பு போலல்லாமல், ஐபோன் பயனர்கள் பல விருப்பங்களைப் பெறுவதில்லை.

சிறந்ததாகக் கருதப்படும் பெரிய திரை

இப்போதைக்கு, உங்களுக்கு சூப்பர் டிஸ்ப்ளே அளவு கொண்ட ஐபோன் வேண்டுமானால், பிரீமியம் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸைப் பெறுவதே ஒரே வழி. பிரம்மாண்டமான டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்காக ரூ.1,27,490 செலவழிக்க அனைவரும் விரும்புவதில்லை.

ஐபோன் 14 மேக்ஸின் வருகை, பயனர்களுக்கு 6.1, 5.4, 4.7 இன்ச் திரை அளவுகளுக்கு அப்பால் புதிய திரை விருப்பத்தை சேர்க்கும். ஆப்பிள் ஐபோன் 14 மேக்ஸ் அறிமுகமானால், அது தோராயமாக 6.7 இன்ச் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் அதே அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 6.7 இன்ச் ஐபோன் வைத்திருப்பதற்கு சில நல்ல காரணங்கள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது. வீடியோக்களைப் பார்ப்பதற்கும், தட்டச்சு செய்வதற்கும், கேம்களை விளையாடுவதற்கும் அல்லது ஆவணங்களைத் திருத்துவதற்கும் பெரிய திரைகள் சிறந்தது.

பெரிய டிஸ்ப்ளே கொண்ட போன்களில், பெரிய பேட்டரிகளை நிறுவ முடியும். மேலும், திறமையான குளிரூட்டும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.

திருமணம் ஆன பெண்கள் Google-இல் என்ன தேடுகிறார்கள் – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

ஐபோன் 14 மேக்ஸ் விலை (iPhone 14 Max Price)

ஆப்பிளின் ஐபோன் 14 மேக்ஸின் ரகசிய ஆயுதம் அதன் விலையாக இருக்கலாம்.

உண்மையில், ஐபோன் 14 மேக்ஸ் பெரிய திரை அளவிலான போன்களை விரும்புவோருக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

ஆனால் ஐபோன் 14 மேக்ஸுக்கு வலுவுட்டுவது அதன் விலையாக இருக்கலாம். ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை விட ஐபோன் 14 மேக்ஸ் $200 டாலர்கள் குறைவாக இருக்கும் என்று தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Haunted Mobile Number: இந்த மொபைல் நம்பர் வைத்திருந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை!

தற்போது, iPhone 13 Pro Max $1099 டாலரில் தொடங்குகிறது. அதாவது iPhone 14 Max, $899 என்ற விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐபோன் 13 மினியின் விலை $699 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

ஐபோன் 14 மேக்ஸ் பிரீமியம் விலையில் வந்தாலும், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்றவற்றை பெரிதுபடுத்தாத, பெரிய திரை ஐபோனை விரும்பும் பயனர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது.

ஐபோன் 14 போன்களில் ஏ16 பயோனிக் சிப்கள் நிறுவப்படும். இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாராக பயன்படுத்தப்படும். iOS 16 இயங்குதளத்துடன் இந்த போன்கள் வெளியாகும் என்பது கூடுதல் சிறப்பு.

Apple-iPhone-14-Pro-Max விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Apple A15 Bionic (5nm)டிஸ்பிளே6.7 inches (17.01 cm)சேமிப்பகம்128 GBகேமரா12 MP + 12 MP + 12 MP + TOFபேட்டரி3687 mAhஇந்திய விலை84900ரேம்6 GB, 6 GBமுழு அம்சங்கள்
Apple-iPhone-14-Pro-MaxApple iPhone 14 Pro Max 256GB 6GB RAMApple iPhone 14 Pro Max 512GB 6GB RAM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.