Rasi Palan 13th June 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 13th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 13ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
நிதி அழுத்தங்களும் திட்டங்களும் உங்கள் மனதில் அதிகமாக இருந்தாலும், சில சாத்தியமான முன்னேற்றங்களைத் தள்ளி வைக்கலாம். உங்களிடம் நல்ல யோசனைகள் நிறைய இருக்கிறது. இப்போது உங்களுக்குத் தேவை கொஞ்சம் கூடுதலான நம்பிக்கையும் அதோடு, இன்னும் கொஞ்சம் தந்திரமும்தான்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
புதிய தொடக்கத்திற்கான நேரம் இது. உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியாக சுத்தமாக கடந்த காலத்தை ஒதுக்கி வைத்து எதிர்காலத்தை திறந்த மனதுடன் எதிர்கொள்ள உங்களை ஊக்குவிக்கும். நீங்கள் ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறீர்கள். நீங்கள், மேலும் சிறிது காலம் அதை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டியிருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டியிருக்கும். எனவே, உங்கள் திட்டங்களை தயார் செய்து, நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நாள் முழுவதும், உங்கள் சுயமரியாதை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேலும், நீங்கள் பகல் கனவு காண வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
நீங்கள் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற நல்ல தருணம் இது. மேலும், உங்கள் கற்பனை மற்றும் மனசாட்சி சொல்வதைக் கேட்பதற்கான நேரமும் இடமும் வேண்டும். நீங்கள் ஒரு சமூக ஈடுபாட்டை ரத்து செய்யலாம். ஆனால், நீங்கள் எந்த துரித நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், நேரம் வரும்போது, உங்கள் உணர்வுகள் கடந்துவிட்டிருக்கலாம் என்பதை உணருங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
உங்கள் விருப்பத்திற்கு எதிராக அல்லது உங்கள் கண்ணியத்திற்கு எதிராக ஏதாவது செய்ய நீங்கள் கட்டாயப்படுத்தப்படுவதைப் போல உணரலாம். இருப்பினும், இப்போது சிறந்த ஆலோசனை என்னவென்றால், முன்னோக்கி சென்று உங்கள் கருத்து பற்றி சக ஊழியர்களையும் பரிசீலிக்க செய்ய கவனம் செலுத்துங்கள். கட்டாயப்படுத்தி வற்புறுத்துவதைவிட அன்பாக கூறினால் எல்லாமே நன்றாக நடக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நீங்கள் இதுவரை சென்றிராத இடங்களுக்குப் பயணம் செய்வதற்கான அருமையான வாய்ப்பு விரைவில் உங்களுக்குக் கிடைக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தொலைதூர பகுதிகளில் உள்ள நண்பர்கள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுடன் அனைத்து தொடர்புகளை வளர்த்துக் கொள்வது நீங்கள் உங்களுக்கு செய்துகொள்ளும் பெரிய உதவியாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
நீங்கள் இப்போது துணையின் அல்லது திருமண வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் கவலைகளைப் பற்றி வாய்விட்டு பேசினாலே அவை மறைந்து போகும். மேலும், உங்கள் உள்ளார்ந்த நல்வாழ்வு உணர்வு மீண்டும் திரும்பும். பழைய செலவு உங்களைத் தொந்தரவு செய்கிறது, ஆனால் கடனை வசூலிக்கும் நேரம் இது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
நீங்கள் கவனத்தை ஈர்ப்பதில் மையமாக இருக்க விரும்பினாலும், பிறர் சொல்வதைக் கேட்பதையும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதையும், அவர்களின் விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதையும் தவிர வேறு வழியில்லை. உங்களுக்கு நிதி வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
நீங்கள் நிதி மற்றும் வணிகம் அல்லது சொத்து விஷயங்களைக் கையாளும் போது, உங்களால் முடிந்தவரை தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் மனது ஒன்று சொல்கிறது, உங்கள் நிதி இருப்பு வேறு ஒன்று சொல்கிறது. எனவே, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் நோக்கங்களைப் பற்றி அவர்களுக்கு தவறான எண்ணத்தை வழங்க இது நல்ல நேரம் அல்ல, எனவே, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்களுக்கு இது ஒரு பிஸியான நாள். உங்கள் பல்துறை திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. உணர்ச்சி சிக்கல்களில், நீங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு நண்பர் அல்லது சக ஊழியர் ஆதரவில் இருந்து பின்வாங்கினால் அது எளிதாக இருக்காது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
சாதகமான கிரகங்களின் அமைப்பு சவாலான கிரக அமைப்புகளால் சரியாக சமநிலைப்படுத்தப்படுகின்றன. அதாவது, நீங்கள் இரண்டிலும் நல்லதைப் பெறலாம். உங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்த இது நல்ல நேரம். சிந்தனையும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். உங்கள் மனதும் அறிவும் உங்களை ஒரே திசையில் வழிநடத்தும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது குழப்பமாகவோ உணர்கிறீர்கள் என்றால், உங்கள் கிரகச் சுழற்சிகள் இப்போது மாறிக்கொண்டிருப்பதாலும், உணர்வுபூர்வமாகப் பேசும்போது உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் தான் அப்படி இருக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் சொந்த வளங்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் ஆதரவை குறைவாகவே நம்ப வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“