Tecno Pova 3: பெரிய 7000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்!

Upcoming Tecno Mobile: டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் நிறுவனம் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதை உறுதி செய்தாலும், வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

7000 mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, 6.9 இன்ச் HD+ டிஸ்ப்ளே போன்ற போன்ற பல சிறப்பம்சங்கள் இந்த போனில் இடம்பெறும். மாடல் எண் LF7 உடன் வரவிருக்கும் Tecno Pova 3 இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (BIS) தளத்தில் காணப்பட்டது.

திருமணம் ஆன பெண்கள் Google-இல் என்ன தேடுகிறார்கள் – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

டெக்னோ போவா 3 மொபைலின் மைக்ரோசைட் அமேசான் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து டெக்னோ போனின் முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன.

ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான டீசரின் படி, டெக்னோ போவா 3 நீலம், வெள்ளி ஆகிய இரு வண்ணங்களில் வெளியிடப்படலாம். கைபேசியின் பின் பேனலில் டூயல் டோன் ஃபினிஷ் உள்ளது.

டெக்னோ போவா 3 அம்சங்கள் (Tecno Pova 3 Specifications)

டெக்னோ போவா 3 ஆனது 6.9 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். திரையில் 1080 × 2460 பிக்சல்கள் தீர்மானம், 90Hz புதுப்பிப்பு விகிதம் இருக்கலாம். இது ஒரு ஐபிஎஸ் எல்சிடி திரையாகும்.

Jio TV: ஜியோ டிவியில் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் 800 டிவி சேனல்கள்!

ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 ஆக்டாகோர் (Octa-core MediaTek Helio G88) புராசஸர் வழங்கப்படும். கிராபிக்ஸ் எஞ்சினாக (Mali G52) இருக்கும்.

இந்த போனில் 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரியுடன் கொடுக்கப்படும். இந்த போன் 5ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் பெறுகிறது என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது.

டெக்னோ போவா 3 கேமரா (Tecno Pova 3 Camera)

டெக்னோ போவா 3 ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சலும், அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

செல்ஃபிகள், வீடியோ அழைப்புகளுக்காக ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம். இதில் 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் உறுதிப்படுத்தப்பட்ட பெரிய 7,000 mAh பேட்டரியும் இருக்கலாம். இரட்டை ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்டீரியோ அமைப்பு, 4D அதிர்வுடன் வரும் Z-Axis லீனியர் மோட்டார் ஆகியவையும் கூடுதல் அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

Tecno-Pova-3 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Helio G90டிஸ்பிளே6.9 inches (17.52 cm)சேமிப்பகம்64 GBகேமரா48 MP + 2 MP + 2 MP + 2 MPபேட்டரி7000 mAhஇந்திய விலை14666ரேம்4 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.