அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் புரிய அல்லது வேறு பலன் தரக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபவதற்காக 5 ஆண்டுகளுக்கு சம்பளத்துடன் வெளிநாட்டு செல்லக் கூடிய விடுமுறையை வழங்கும் வகையில் சட்டத் திருத்தங்களை செய்து, சுற்றறிக்கை ஆலோசனையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லை
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு வராத வகையில் சட்டத் திருத்தங்களை செய்து, சுற்றறிக்கையை வெளியிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான யோசயை அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் , மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர், அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளதுடன் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.