குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்க வருமாறு 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் புதன் மதியம் 3 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் மற்றும் மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.