அடடே நம்ம சென்னையிலா.. லண்டன் நிறுவனத்தின் டக்கரான அறிவிப்பு..! #Nothing

இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் கடுமையான போட்டி இருக்கும் நிலையில் புதிய நிறுவனங்களால் வர்த்தகத்தைப் பெறுவது பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில் லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

சியோமி-யின் புதிய தலைவர் ஆல்வின் சே.. யார் இவர் தெரியுமா..?

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தை

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தாக அதிக ரசிகர்களைக் கொண்டது ஓன்பிளஸ் தான், இது சீன நிறுவனமாக இருந்தாலும், சீனா-வை காட்டிலும் அதிகளவில் பிரபலமாக இருப்பது இந்தியாவில் தான்.

ஓன்பிளஸ்

ஓன்பிளஸ்

அதேபோல் ஆரம்பம் முதல் ஓன்பிளஸ் தனது பிராண்டு வேல்யூவை சிறப்பான முறையில் தக்க வைத்த காரணத்தால் ஒவ்வொரு புதிய மாடல் போன்களுக்கும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.

கார்ல் பெய்

கார்ல் பெய்

இவ்வளவு பெரிய பிராண்டை கார்ல் பெய் மற்றும் பீட் லாவ் ஆகியோர் இணைந்து 2013ஆம் ஆண்டு உருவாகினர். இந்நிலையில் கார்ல் பெய்ய் 2020ல் ஓன்பிளஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உருவாக்கிய நிறுவனம் தான் நத்திங் (Nothing).

நத்திங் நிறுவனம்
 

நத்திங் நிறுவனம்

இந்த நிறுவனம் ஏற்கனவே ப்ளூடூத் இயர் அறிமுகம் செய்து வெற்றிக் கண்ட நிலையில் தற்போது ஸ்மார்ட்போன்ற அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நத்திங் ஸ்மார்ட்போன் தயாரிக்கக் கார்ல் பெய் தேர்வு செய்துள்ள இடம் தமிழ்நாடு.

ஜூலை 12ஆம் தேதி

ஜூலை 12ஆம் தேதி

கார்ஸ் பேய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம் ஜூலை 12ஆம் தேதி தனது phone(1) என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து இதுக்குறித்து எதிர்பார்ப்பு டெக் வல்லுனர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அசம்பிளி பணிகள்

அசம்பிளி பணிகள்

இந்நிலையில் Nothing phone(1)-னின் அசம்பிளி பணிகளை இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஏற்கனவே துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தற்போது பாக்ஸ்கான், பெக்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கும் நிலையில் இவை தான் Nothing phone(1) தயாரிப்பு பணிகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா டார்கெட்

இந்தியா டார்கெட்

Nothing நிறுவனம் இந்த முறை தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை இந்தியாவைக் குறிவைத்து அமெரிக்கச் சந்தை வரையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதை தயாரிப்பு பணிகளுக்காகத் தமிழ்நாட்டைச் சேர்வு செய்துள்ளது மூலம் தெரிகிறது.

முடிவுக்கு வருகிறது ஸ்மார்ட்போன் காலம்: நோக்கியா சி.இ.ஓ சொல்லும் புதிரான தகவல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

London based Nothing starts assembling its new smartphone phone(1) in Tamil Nadu

London based Nothing starts assembling its new smartphone phone(1) in Tamil Nadu அடடே நம்ம சென்னையிலா.. லண்டன் நிறுவனத்தின் டக்கரான அறிவிப்பு..!#Nothing

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.