சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ. 27 லட்சம் மோசடி புகார் எழுந்துள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கந்தசாமி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 6 பேருக்கு மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கந்தசாமியிடம் உறுதியளித்துள்ளார். வேலை வாங்கி தருவதாக 6 பேரிடம் பெற்ற ரூ. 27 லட்சத்தை நத்தம் விசுவநாதன் கந்தசாமி இடம் கொடுத்துள்ளார். ரூ. 27 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் போலீசில் புகார் தெரிவித்தார். மோசடி பற்றி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கந்தசாமி தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புகார் தெரிவித்துள்ளார்.