ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 100 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு| Dinamalar

ராயப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கி்ணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன், 100 மணி நேர பேராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் ஜான்ஜ்கீர்சம்பா மாவட்டம் பிஹிரித் என்ற கிராமத்தைச் சேரந்த ராகுல் ஷாகு என்ற 10 வயது சிறுவன் கேட்பாற்று திறந்த கிடந்த ஆள்துளை கிணற்றில் கடந்த 11-ம் தேதி மாலை தவறி விழுந்துவிட்டான்.

தகவலறிந்த மீட்பு படை மற்றும் தீயணைப்புத்துறையினர், 25 ராணுவ வீரர்களும் சிறுவனை மீட்க நடவடிக்கையில் இறங்கினர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீட்பு நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். 80 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதால் மீட்கும் நடவடிக்கையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.


எனினும் விடா முயற்சியுடன் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, இன்று (ஜூன் 15) இரவு 11: 50 மணி அளவில் சிறுவனை வெற்றிகரமாக மீட்டனர். சுமார் 100 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.. உடன் தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பிலாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகி்ன்றனர்.

முதல்வர் பாராட்டு

மீட்பு படையினர், மாவட்ட கலெக்டர் ஆகியோரை முதல்வர் பூபேஷ் பாகல் வெகுவாக பாராட்டியதுடன், ராகுல் சாகுவிற்காக பிரார்த்தனை செய்ததாகவும், பிரார்த்தனை வீண்போகவில்லை. மருத்துவமனையில் இருந்து குணமடைய வாழ்த்துவதாகவும் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.