இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்த சவுதி அரேபியாவை, ரஷ்யா பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையை 85% வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகின்றது.
இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் ஈராக் தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா இருந்த நிலையில் தற்போது அந்த இடத்தை ரஷ்யா பிடித்துக்கொண்டு சவுதி அரேபியாவை மூன்றாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி விட்டது.
மஹிந்திரா நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றம்.. என்ன நடக்கிறது..!
ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்பட ஒருசில நாடுகள், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க மறுத்தன. இதனை அடுத்து இந்தியா உட்பட ஒரு சில நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா வழங்கி வருவதால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்து வருகிறது.
ஒட்டுமொத்த இறக்குமதி
இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் ரஷ்யாவிடமிருந்து மட்டும் 16 சதத்திற்கு மேல் இறக்குமதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு கணிசமாக குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
சலுகை விலை
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா அவற்றில் பெரும்பாலான பகுதியை ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் இறக்குமதி செய்து வருவதை உலக நாடுகள் ஆச்சரித்துடன் பார்த்து வருகின்றன.
அதிகரிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் ரஷியாவிடமிருந்து இந்தியா தினந்தோறும் 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நிலையில் போர் ஆரம்பித்தவுடன் அதாவது ஏப்ரல் மாதம் தினந்தோறும் 3.70 லட்சம் பேரல் இறக்குமதி செய்தது. அது மே மாதம் தினந்தோறும் 8.70 லட்சம் பேரலாக அதிகரித்தது.
இன்னும் அதிகரிக்கும்
ஜூன், மேலும் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் இந்த அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் ரஷியாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்த மொத்த கச்சா எண்ணெய் அளவை விட கடந்த ஆறு மாதங்களில் இறக்குமதி செய்த அளவு அதிகம் என்பதுதான் ஆச்சரியமான உண்மை.
30 டாலர்கள் தள்ளுபடி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா ஒரு பேரலுக்கு 30 டாலர்கள் வரை தள்ளுபடி விலையில் வாங்கி வருவதால் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Russia overtakes Saudi Arabia to become India’s 2nd biggest oil supplier
Russia overtakes Saudi Arabia to become India’s 2nd biggest oil supplier | இந்தியா தான் பெஸ்ட் கஸ்டமர்: சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளியது ரஷ்யா!